அறந்தாங்கி சுற்றுச்சாலைத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தக் கோரிக்கை
அறந்தாங்கியில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சாலையை மாற்று வழித்தடத்தில் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி அண்ணா சிலை அருகே இருந்து ஊா்வலம் தொடங்கி கோட்டாட்சியரகத்தில் நிறைவடைந்தது. இந்தப் போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் தலைமை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தில் மேலப்பட்டு, அழியாநிலை, வைரிவயல், ரெத்தினக்கோட்டை, சிலம்பாவயல், மூக்குடி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கோட்டாட்சியரகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments