இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒருங்கிணைப்பில் இராமநாதபுரம் மாணவர்களுக்கான மாபெரும் கல்விக்கடன் முகாம்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  கே நவாஸ்கனி எம்பி ஒருங்கிணைப்பில் இராமநாதபுரம் மாணவர்களுக்கான மாபெரும் கல்விக்கடன் முகாம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நவாஸ்கனி எம்பி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு சுதாகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் திரு பாண்டி, பள்ளி துணை ஆய்வாளர் திரு தச்சனாமூர்த்தி மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களுக்கான மாபெரும் வங்கி கல்விக்கடன் முகாம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒருங்கிணைப்பில்  இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 12-06-2023 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை  நடைபெற்றது.

தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 19 வங்கிகள் பங்கேற்றனர்.

549 மாணவர்கள் பங்கேற்று கல்வி கடனுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments