சாயல்குடி அருகே அவத்தாண்டை கிராமத்திற்கு டவுன் பஸ் வசதி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி M.P கொடியசைத்து தொடங்கி வைத்தார்.




சாயல்குடி அருகே அவத்தாண்டை கிராமத்தில் உள்ள பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமானால் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருவாடி பஸ் நிறுத்தத்திற்கு சென்று பஸ் ஏற வேண்டி இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், ஆகியோர்களிடம் மனு அளித்தனர். அதுமட்டும் இன்றி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியிடமும் மனு அளித்திருந்தனர். முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள், அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பெண்களும் இலவசமாக பயணம் செய்ய அந்த பகுதிக்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று அவத்தாண்டை கிராமத்திற்கு புதிதாக வந்த பஸ்சை கிராமமக்கள் தேங்காய் உடைத்து சூடம் காட்டி டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

 நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் தலைமை வகித்தனர். சாயல்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் அப்துல்சத்தார், காங்கிரஸ் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காணிக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி செல்லப் பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச் செழியன், தி.மு.க. மேற்கு ஒன்றிய பொருளாளர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக வந்த பஸ்சை நவாஸ் கனி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


 இந்நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் பத்மகுமார், முதுகுளத்தூர் மேனேஜர் சிவகார்த்திக், அவத்தாண்டை தி.மு.க. கிளைச் செயலாளர் லட்சுமணன் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments