புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் ஊராட்சி மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் VIP நகரில் கடந்த பல வருடமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருவதால், இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுவாக வீட்டு உபயோகத்திற்கு அதிக அழுத்த (220 வோல்ட்) மின் வினியோகம் இருக்க வேண்டும். ஆனால் இங்கே அதிக நேரங்களில் (140 வோல்ட்) குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. கோடை வெயில் முடிந்தும், புழுக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் மின் விசிறியை இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் மின் மோட்டார்கள் இயங்குவதில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் வேலை செய்வதில்லை. சில நேரங்களில் பழுதடைந்து விடுகின்றது. மேலும் இந்த பகுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன.மேலும் இதுகுறித்து கொடிக்குளம் மின்பகிர்மான அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கோபாலப்பட்டிணம் VIP நகரில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி குறித்தும் புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்க பொதுமக்கள் கோரிக்கை என GPM மீடியாவில் செய்தி வெளியிட்டதோடு கொடிக்குளம் உதவி பொறியாளருக்கு செய்தியை அனுப்பிருந்தோம்.
அதனடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் கூடுதல் தகவல் வேண்டி GPM மீடியா சார்பாக கொடிக்குளம் துணை மின் நிலைய உதவி பொறியாளருக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், கோபாலப்பட்டிணம் VIP நகருக்கு புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீமிசல் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், அந்த பணி முடிவடைந்ததும் VIP நகர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
GPM மீடியாவின் கூடுதல் கேள்விகளுக்கு தகவல் அளித்த கொடிக்குளம் துணை மின் நிலைய உதவி பொறியாளருக்கு GPM மீடியா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறைந்தழுத்த மின்னழுத்தத்தை போக்க VIP நகர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.