அறந்தாங்கி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வேகம் பகுதி வாரியாக கிடைத்த தகவல்கள்

திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி  கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
 
தாம்பரம் செங்கோட்டை ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு ,
திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு ,
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு,
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு,

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

லோகோ: 

TBM-TVR:   தாம்பரம் முதல் திருவாரூர் வரை எலக்ட்ரிக் லோகாவில் இயக்கப்படும்

TVR-SCT: திருவாரூர் முதல் செங்கோட்டை வரை டீசல் லோகாவில் இயக்கப்படும்

20683/20684 தாம்பரம் -  செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயிலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வேகம் பகுதி வாரியாக :

1. தாம்பரம் - விழுப்புரம் 110 கிமீ/மணி

2.விழுப்புரம் -  மயிலாடுதுறை -  திருவாரூர் 100 கிமீ/மணி

3. திருவாரூர் - காரைக்குடி 75 கிமீ/மணி

4. காரைக்குடி -  மானாமதுரை 100 கிமீ/மணி

5. மானாமதுரை -  விருதுநகர் 80 கிமீ/மணி

6. விருதுநகர் - நெல்லை -  தென்காசி 110 கிமீ/மணி

7. தென்காசி - செங்கோட்டை 60 கிமீ/மணி

தாம்பரம் - செங்கோட்டை ரயிலின் சில சிறப்புகள். 

* 1904ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ்  ரயில்கள் இயங்கி  21.09.2012 அன்று  அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த திருநெல்வேலி -  தென்காசி ரயில் வழித்தடத்தில் நிரந்தரமாக முதன் முதலாக சென்னைக்கு இயக்கப்படும் ரயில்.

*நூற்றுக்கண்டு   காலமாக மீட்டர் கேஜ்  ரயில்கள் இயங்கி  01.06.2019 அன்று  அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த திருவாரூர் -  காரைக்குடி ரயில் வழித்தடத்தில் நிரந்தரமாக முதன் முதலாக சென்னைக்கு இயக்கப்படும் ரயில்.

* அம்பாசமுத்திரம்,  பட்டுக்கோட்டை வழியாக முதன்முறையாக சென்னைக்கு நிரந்தர ரயில். 

* 2 இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 எக்கனாமிக் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 தூங்கும் வசதி பெட்டிகள், மூன்று முன்பதிவில்லா பெட்டிகள், 2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

*பெட்டிகள் அனைத்தும் புத்தம் புதிய  ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட LHB பெட்டிகள் ஆகும்.

* தாம்பரம் - திருவாரூர் இடையே மின்சார இன்ஜினிலும், திருவாரூர் -  செங்கோட்டை இடையே டீசல் இன்ஜினிலும் இயங்கும்.

* தாம்பரம் - செங்கோட்டை இரு மார்க்கத்திலும் 13 மணி 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

* தமிழ்நாட்டில் முதல் முறையாக மதுரை மற்றும் திருச்சி செல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் முதல் ரயில்.

* தமிழகத்திற்கு உள்ளே புறப்பட்டு தமிழகத்திற்கு உள்ளே முடியும் ரயில்களில் அதிக தூரம் பயணிக்கும் மூன்றாவது ரயில் : தாம்பரம் செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 

தமிழ்நாட்டுக்கு உள்ளேயே பயணிக்கும் நீண்ட தூர ரயில்கள்

1. 12690 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாரந்திர எக்ஸ்பிரஸ் 883 கிமீ, சராசரி வேகம் 55 கிமீ, பயண நேரம் 16 மணி நேரம் (வழி : வேலூர் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர் , திருச்சி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி)

2. 16105  சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் தினசரி எக்ஸ்பிரஸ் 776 கிமீ, சராசரி வேகம் 53 கிமீ, பயண நேரம் 14 மணி 45 நிமிடங்கள் நேரம் (வழி : செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் , திருச்சி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி)

3. 20683  தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 765 கிமீ, சராசரி வேகம் 55 கிமீ, பயண நேரம் 13 மணி 50 நிமிடங்கள் நேரம் (வழி : விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி , காரைக்குடி , விருதுநகர், திருநெல்வேலி)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments