திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 648 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, I.A.S வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.06.2023) நடைபெற்றது.
இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
திருப்புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.12.17 இலட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனத்தினை பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 648 பயனாளிகளுக்கு ரூ.1,05,21,798 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.
மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட தகவல்களை பொதுமக்கள் அனைவரும் தங்களது அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும் தெரிவித்து தகுதியான பொதுமக்கள் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். மருத்துவத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு நல்வாழ்விற்குரிய தகவல்களை அறிந்துகொண்டு நலவாழ்வு வாழ வேண்டும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.
இந்த மக்கள் தொடர்பு முகாமில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் திரு.சு.சொர்ணராஜ், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் செல்வி.உமாதேவி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திரு.துரைமாணிக்கம், வட்டாட்சியர் திரு.மார்டின் லூதர்கிங், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திரு.சுந்தரபாண்டியன், திரு.செந்தில்குமரன், ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி.மலர் நல்லதம்பி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.