ஆவுடையார் கோவிலில் வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வு தொடர்பாக வெளியிட்ட அரசாணை மீது திருத்தங்கள் மேற்கொண்டு திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும். பதவி உயர்வு பெறும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டும் பாரபட்சமாக முதுநிலை நிர்ணயம் செய்வதை கைவிட்டு விரைவில் நீதி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments