மல்லிப்பட்டிணம் அருகே குட்டி மெரினா என்று அழைக்கப்படும் புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மை பணி
சென்னைக்கு ஒரு மெரினா பீச் என்றால் தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம் பீச் அது அனைவரையும் ஈர்க்கிறது.
குட்டி மெரினா என்று அழைக்கப்படும் புதுப்பட்டிணம் கடற்கரை 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் வங்க கடலின் கடற்கரை அமைந்துள்ளது. இதில், 27 மீனவ கிராமங்கள் உள்ளன. மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடித் தளங்கள் அமைந்துள்ளன. இதில், மல்லிப்பட்டினம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் கிராமம் அமைந்துள்ளது. 

இங்குள்ள கடற்கரைப் பகுதி கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழல், கடற்காற்று, அருகில் உள்ள தென்னந்தோப்புகளின் நிழல், 2 கி.மீ தொலைவுக்கு வெண்ணிற மணற்பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் என அனைவரையும் இந்த கடற்கரை வசீகரித்து வருகிறது.

இதனால், விடுமுறை நாட்களில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் ‘தஞ்சாவூர் மாவட்ட பீச்' &
குட்டி மெரினா என்று அழைக்கப்படும் புதுப்பட்டிணம் கடற்கரை 
வருகின்றனர். 

சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கின்றனர். மேலும், குளிர்பானக் கடைகள், பொம்மைக் கடைகள் என ஏராளமான திடீர் கடைகள் முளைத்து வருகின்றன.

கடற்கரையில் தூய்மை பணி:

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மைபணி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

மேலும், கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர்கள் லெப்டினன்ட் அப்பாஸ் மற்றும் டி.ஒ. அமீர் காசிம் ஆகியோர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments