புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள்201 பேர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி
மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வான `நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் இத்தேர்வை எழுதியிருந்தனர். இதில் 78 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் `நீட்' தேர்வு எழுத சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 132 மாணவர்கள், 626 மாணவிகள் என மொத்தம் 758 பேர் `நீட்' தேர்வை எழுதியிருந்தனர். இதில் 51 மாணவர்கள், 150 மாணவிகள் என 201 பேர் தேர்ச்சி பெற்றனர்.

300 மதிப்பெண்களுக்கு மேல்...

`நீட்' தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களில் 107 மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி வாய்ந்ததாக கருதப்படும். அந்த அடிப்படையில் 201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 301 முதல் 500 மதிப்பெண்களுக்குள் 42 பேரும், 201 முதல் 300 மதிப்பெண்களுக்குள் 42 பேரும், 107 முதல் 200 மதிப்பெண்களுக்குள் 117 பேரும் பெற்றனர். 107 மதிப்பெண்களுக்குள் 557 பேர் எடுத்திருந்தனர். 201 பேர் தேர்ச்சி பெற்றதில் பிளஸ்-2 முடித்து முதன்முறையாக நீட் தேர்வை சந்தித்த மாணவ-மாணவிகளில் 129 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. ரீபிட்டர்கள் 72 பேர் தேர்ச்சி பெற்றனர். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கலந்தாய்வு தொடங்கிய பின்பு தான் இதன் விவரம் தெரியவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments