அரசு பள்ளி எழுத்தருக்கு4 ஆண்டுகள் சிறை தண்டனை
மாற்றுச்சான்றிதழ் நகல் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு பள்ளி எழுத்தருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவு எழுத்தராக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2013-ம் ஆண்டு புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த முன்னாள் மாணவரான முத்துச்செல்லப்பனிடம் (வயது 45) மாற்றுச்சான்றிதழ் நகல் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கினார். அப்போது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில் மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மாரிமுத்துவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments