மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்
மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி  வட்டார கல்வி அலுவலர்  திரு செழியன் அவர்களின் தலைமையிலும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் மற்றும்  மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக் கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையினை அதிக படுத்தவேண்டும் என்றும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கட்டிடங்கள் உறுதித்தன்மையுடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பு முறைகள் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் பள்ளிச் செல்லாக் குழந்தைகள் கண்டறியும் களப்பணி மேற்கொண்டு மீளவும் பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளி அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. எமிஸ் தொடர்பான பணிகளை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 இக்கூட்டத்தில்  அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு வேல்சாமி மற்றும் திருமதி அங்கையற்கண்ணி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்னண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments