காரைக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்த தனியார் பேருந்து - ஒருவர் உயிரிழப்பு!
குன்றக்குடி அருகேயுள்ள பாதரக்குடி நான்கு வழிச்சாலையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்ததோடு ஒருவர் உயிரிழந்தார்.

காரைக்குடி மேலூர் சாலையில் நான்குவழிச் சாலைப்பணிகள் நடந்து வருகிறது. ஒருபுறம் சாலை பணி நடந்து வரும் நிலையில் மறுபுறம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று திருப்புவனத்தில் இருந்து காரைக்குடிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 

குன்றக்குடி அருகே பாதரக்குடி நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 48 பேரில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நடத்துனரின் உதவியாளர் மதுரையைச் சேர்ந்த சிவா 22 என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து குன்றக்குடி காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காயம் அடைந்தவர்களை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த நடத்துனரின் உதவியாளர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments