சீனாவில் நீச்சல் குளத்தில் குளித்தபோது பரிதாபம்: தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரத்தில் சிக்கி புதுக்கோட்டை மருத்துவ மாணவர் பலி




புதுக்கோட்டை காமராஜபுரம் 6-ம் வீதியை சேர்ந்த ரவி-விசாலாட்சி தம்பதியின் மகன் வைத்தியநாதன் (வயது 21). இவர் சீனாவில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள நீச்சல் குளத்தில் வைத்தியநாதன் மற்றும் அவரது நண்பர்கள் குளித்துள்ளனர்.அப்போது நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்றும் எந்திரத்தை நீச்சல் குள நிர்வாகம் இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் வைத்தியநாதன் இழுத்து செல்லப்பட்டு அந்த சுத்திகரிப்பு எந்திரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்த சக மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வைத்தியநாதனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைகேட்டு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் வைத்தியநாதனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை அடுத்த காமராஜபுரம் 6வது தெருவில் மாணிக்கம் - விசாலாட்சி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு வைத்தியநாதன் என்ற மகன் இருந்தார். இதில் விசாலாட்சி பல் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், தனது வைத்தியநாதனை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீன நாட்டில் உள்ள ஜின்ஜோ மாகாணத்தில் (Jinzhou Province in China) இயங்கி வரும் ஜின்ஜோ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (Jinzhou Medical University) மருத்துவப் படிப்பிற்காக விசாலாட்சி சேர்த்து உள்ளார்.

இதனையடுத்து, தற்போது வைத்தியநாதன் அங்கு 4ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு நேற்று சக மாணவர்களோடு சேர்ந்து வைத்தியநாதனும் குளிக்கச் சென்று உள்ளார். அப்போது நீச்சல் குளத்தில் மாணவர் வைத்தியநாதன் மட்டும் குளித்துக் கொண்டிருந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்றும் கருவியை (Swimming pool Water Filtration System) நீச்சல் குள நிர்வாகம் இயக்கியதாகவும் கூறப்படுகிறது.இதையும் படிங்க: Cyclone Biparjoy Impacts: குஜராத்தை புரட்டிப்போட்ட பிப்பர்ஜாய் புயல் - 22 பேர் காயம், 940 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு!அந்த நேரத்தில், அதில் மாணவர் வைத்தியநாதன் இழுத்துச் செல்லப்பட்டு, அந்த சுத்திகரிப்பு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனையடுத்து, இதனைப் பார்த்த சக மருத்துவ மாணவர்கள் வைத்தியநாதனின் குடும்பத்திற்கு தெரிவித்து உள்ளனர். இதனைக் கேட்டு மாணவர் வைத்தியநாதனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும், உயிரிழந்த மாணவர் வைத்தியநாதனின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அரசு தரப்பிடம் எதுவும் முறையிடவில்லை எனவும் மாணவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.இவ்வாறு சீனாவில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, புதுக்கோட்டை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments