புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் SDPI கட்சியின் கோட்டைபட்டினம் நகர செயற்குழு கூட்டம் 17/06/2023 சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட செயளாலர் F.முகம்மது சாலிகு தலைமை தாங்கினார். M.செய்யது இப்ராஹிம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகர தலைவர் A.முகம்மது அப்துல் காசிம், நகர பொருளாளர் அரபாத் கான், செயற்குழு உறுப்பிர்கள் குலாம் முகம்மது, நூர் முகம்மது, ராசு, ஜகுபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. வருகின்ற ஜுன் 21-ஆம் தேதி தேசிய அரசியல் கட்சியான SDPI கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க தினத்தில் SDPI கட்சியின் கொடி ஏற்றி நல திட்ட உதவியுடன் நிகழ்சியை கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2.பசியற்ற, பயமற்ற இந்தியாவை உருவாக்க எங்களோடு சேர்ந்து பயணிக்க வாருங்கள், வாருங்கள் என்று ஜுன் 15 முதல் ஜூலை 10 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. எனவே உறுப்பினர்களை அதிகமாக சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
3.தொடர் மின்வெட்டை கண்டித்தும், மின்னழுத்தம் குறைவாக (லோ பவர் ) இக்பால் தெரு, சதாம் நகர், லாடகார தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட வேண்டும். கோரிக்கைகளை ஏற்று உடனடியாக சரி செய்து தர வேண்டும் என மின்சார வாரியத்தினை கேட்டு கொள்ளப்படுகிறது.
4.வீடுகளுக்கு வரும் தண்ணீர் வெயில் காலம் என்பதால் போதுமானதாக இல்லை எனவே வாரம் இருமுறை கொடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி நிர்வாகம் போர் கால அடிப்படையில் சரி செய்து தரும் படி கேட்டு கொள்ளப்படுகிறது.
5.ராம் நகர் 3-ஆம் வீதி சிமெண்ட் சாலை, சதாம் நகர் 1-ஆம் வீதி ஆகியவை மழைகாலங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சரி செய்ய ஊராட்சி தலைவர் அவரிடம் மனு கொடுப்பது.
6.நெல்லி குளம் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது அதை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ள ஊராட்சி மன்றத்தில் மனு அளித்தல்.
7 .புதிய கட்சி கொடிகம்பங்கள் இரண்டு நிறுவுதல்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக தொகுதி தலைவர் பசீர் அஹமது நன்றி தெரிவித்தார்.
தகவல்: செய்யது இபுராஹீம், கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.