பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல்: 830 மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் மாற்றம் தவறுக்கு காரணமான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை




பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 830 மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் மறுமதிப்பீடு, மறுகூட்டலில் தவறுக்கு காரணமான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.

மறுமதிப்பீடு, மறுகூட்டல்

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தாராளமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக ஒரு பக்கம் பேசவும் பட்டது.

இந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி, மறுமதிப்பீட்டுக்கு 1,300 மாணவர்களும், மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 300 பேரும் விண்ணப்பித்து இருந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கான முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 14-ந் தேதி வெளியிட்டது.

830 பேரின் மதிப்பெண்கள் மாற்றம்

அதில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 830 மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர்களில் 50 தேர்வர்களின் விடைத்தாளில் 10 மதிப்பெண்களுக்கு மேல் மறுகூட்டல், மறுமதிப்பீடு பிழை இருந்ததாகவும், அவைகள் திருத்தம் செய்யப்பட்டு மதிப்பெண் மாற்றம் செய்து வழங்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒழுங்கு நடவடிக்கை

மதிப்பெண்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களை ஆய்வு செய்ய அரசு தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உதவி தேர்வாளர்கள், ஆய்வு அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்வாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் மீது கவனம் செலுத்தி, அதில் தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. கிட்டதட்ட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments