SSS ஹூப்ளி - ராமேஸ்வரம் வாரந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு



SSS ஹூப்ளி - ராமேஸ்வரம்  வாரந்திர சிறப்பு ரயில் சேவை  நீட்டிப்பு ,என தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் சேவை வருகிற 25-ந் தேதியுடன் முடிகிறது இதற்கிடையே, இந்த ரெயில் சேவையை இருமார்க்கங்களிலும் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தற்போது பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன. 

ஹூப்ளி - இராமேஸ்வரம்  (இராமநாதபுரம்)

அதன்படி, ஹூப்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .

இந்த ரெயில் (வ.எண்.07355) சனிக்கிழமை தோறும் ஹூப்ளியில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. 

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) - ஹூப்ளி

வருகிற 26-ந் தேதியுடன் முடிவடையும் ராமேசுவரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் சேவை வருகிற 2-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.07356) ராமநாதபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படுகிறது

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், எஸ்வந்த்பூர் (பெங்களூரு), பனஸ்வாடி,(பெங்களூரு), ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments