மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் தொடர்பான கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளியில்  இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் , பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்து நீண்ட நாட்கள் வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் தொடர்பான  ஒன்றிய அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார வள மையத்தில் மணமேல்குடி  வட்டார கல்வி அலுவலர் திரு. செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு திருமதி மகாலட்சுமி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மணமேல்குடி காவல்துறை ஆய்வாளர் திரு குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு பள்ளிச்  செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார். 

 தன்னுடைய வாழ்க்கையில் பத்தாம் வகுப்பில் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் ஒரு ஆசிரியர் உதவி செய்து பள்ளியில் தொடர்ந்து படித்ததாக  நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி நெகிழ்வு படுத்தினார்.

இக்கூட்டத்தில் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் படித்து வரும் குழந்தைகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மற்றும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் இடைநிற்றல் பிரச்சனை தீர்பதற்கும் 
பள்ளி அளவிலான குழுக்களின் செயல்பாடுகளை  மதிப்பீடு செய்வதற்கும்.  


மீண்டும் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கும் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குவதற்கும் வட்டார அளவிலான குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி  மாணவர்களை சேர்க்கை செய்வதற்கான வழிவகை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்குழுவானது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வட்டார அளவில் கூடி மாணவர்களின் சேர்க்கை குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அதன் முன்னேற்ற நிலை குறித்தும் விவாதிப்பது என்ன முடிவு எடுக்கப்பட்டது.

 பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர்களிடம் தமிழக அரசு  செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தில்  வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன்  வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் திருமதி பரிமளா காந்தி  வட்டார மருத்துவ அலுவலர் திரு விஜய் ஆனந்த் அவர்கள் வட்டார குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினர் ரபேல் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மஞ்சுளா நடேசன் அவர்கள்  ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கயற்கன்னி சிறப்பு ஆசிரியர்கள் மணிமேகலை கோவிந்தன்  இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் மற்றும் கணக்காளர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments