துபாயில் உடல்நிலை சரியில்லாமல் உள்ள கணவரை மீட்டு தர மனைவி கலெக்டரிடம் கோரிக்கை
அறந்தாங்கி தாலுகா நாகுடி அருகே மாணவநல்லூரை சேர்ந்த சித்ரா மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், எனக்கு திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் குமார் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு துபாய்க்கு சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், நான் ஊருக்கு வருகிறேன் என்றும் செல்போனில் கூறினார். நாங்களும் ஊருக்கு வரச் சொல்லியிருந்தோம். இதற்கிடையில் 10 நாட்களுக்கு முன்பு இரவு ஊருக்கு வருவதாகவும், திருச்சி விமான நிலையத்துக்கு எங்களையும் வர சொல்லியிருந்தார்.

 நாங்களும் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தோம். ஆனால் அவர் ஊருக்கு வரவில்லை. இது சம்பந்தமாக என் கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. பின்னர் எனது கணவர் வேலை செய்யும் ஓட்டல் முதலாளிக்கு செல்ேபானில் தொடர்பு கொண்டு கேட்ட போது குமாருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் விமானத்தில் ஏற்ற மறுத்து விட்டார்கள் என்று கூறினார்.

 இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் வேறு ஒரு நபர் மூலம் என் கணவர் தங்கி இருக்கும் விடுதியில் சென்று பார்த்த போது நடக்க கூட முடியாமல் மிக மோசமான நிலையில் இருக்கும் வீடியோ பதிவை எங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எனது கணவருக்கு எந்த சிகிச்சை அளிக்காமலும், ஊருக்கும் அனுப்பாமலும் இருப்பதால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே உடல்நிலை சரியில்லாமல் துபாயில் உள்ள என் கணவரை மீட்டு சிகிச்சை அளிக்க ஆவன செய்யுமாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments