அறந்தாங்கி வழியாக மீட்டர் கேஜ் காலத்தில் 17 வருடங்களுக்கு முன் காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இயங்கிய கம்பன் எக்ஸ்பிரஸ் இரவு நேர தினசரி ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை
அறந்தாங்கி வழியாக மீட்டர் கேஜ் காலத்தில் 17 வருடங்களுக்கு முன்  காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இயங்கிய  கம்பன் எக்ஸ்பிரஸ் இரவு நேர தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு ரயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தென்னக இரயில்வேயில் மீட்டர் கேஜ் காலத்தில் போது திருவாரூர் - காரைக்குடி தடத்தில் இயங்கிக் கொண்டிருந்த பல ரயில்கள் மக்களின் அபிமானம் பெற்றது கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். 

தினமும் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் , செங்கல்பட்டு வழியாக சென்னைக்கும், மீண்டும் அங்கிருந்து இதே வழித்தடத்தில் காரைக்குடிக்கும் இரவு நேரத்தில் இரு மார்க்கத்திலும் இயங்கியது.

கம்பர் பிறந்த இடம் எனக் கூறப்படும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தோழுத்தூர் என்பதாலும், அவரது நினைவிடம் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கருதுப்பட்டியில் உள்ளதாலும் 
இவைகளை மனதில் வைத்து 90
களின் வாக்கில் காரைக்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை வழி 
சென்னைக்கு கவிச்சக்கரவரத்தி கம்பன் பெயரில் விரைவு ரயில் இயக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் நாகூரில் இருந்து நாகூர் - ஆண்டவர் என்ற பெயரி லும் சென்னைக்கு தினமும்  ஒரு ரயில் இயக்கப்பட்டது.

நாகூரில்இருந்து வரும் ரயிலும். காரைக்குடியில் இருந்து வரும் ரயிலும் திருவாரூரில் இணைக்கப்பட்டு லிங்க எக்ஸ்பிரஸ்) கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற முழு பெயரில் இந்த இரு ரயில்களும் இயங்கியது. 

திருவாரூர் மண்ணின் மைந்தரான மறைந்த முதல்வர் கலைஞர் ஒரு ரயில் ஆர்வலர் என்பதால் திருவாரூர் வரும்
போதெல்லாம் அதிக முறை இந்த கம்பன் ரயிலில் தான் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் காலபோக்கில் திருவாரூர்- காரைக்குடி பிரிவு அகலப்பாதை மாற்றத்தினால் ரயில் சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில் இந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது. 

ஆனால் தற்போது சென்னையிருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிடப் பட்டுள்ளது. 

இருப்பினும் வழக்கம்போல் ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கியது போன்று இந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்குடிக்கு இயக்கிட வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் பொறுப்பாளர் பாரதிதாசன் முருகையன் கூறுகையில்,

திருவாரூர் - காரைக்குடி பிரிவு அகல பாதை பணிகள் முடிவடைந்து பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டு விட்டதால் தினமும் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை வழியாக சென்னை எழும்பூர் வரை கம்பன் எக்ஸ்பிரஸ்  என்ற பெயரில் விரைவு ரயில் இரு மார்கத்திலும் இயக்கப்பட வேண்டும். 

அருகில் உள்ள நகரங்களை ஒப்பிடுகையில் திருவாரூர் பகுதி ரயில் சேவைகளில் மிக மிக பின் தங்கியதாகலே உள்ளது

எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழியாக, காரைக்குடியிலிருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரயில் இயக்கிட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், 

திருவாகுரில் அனைத்து வசதிகளும்-இருந்து வருவதால் ரயில்களுக்கான முதன்மை பணி மனை அமைத்திடவும்.

ராமேஸ்வரத்திலிருந்து பட்டுக்கோட்டை திருவாரூர் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு  இயக்கிடவும் உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு பாரதிதாசன் முருகையன் தெரிவித்துள்ளார்‌‌.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments