புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

9 பவுன் பறிப்பு

புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்தவர் அசோகன். இவர் புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 44). இவர், நேற்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கவிதாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அசோகன் கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments