அறந்தங்கியில் ஜே. காம் அமைப்பு துவக்கம்
அறந்தங்கியில் ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பாக ஜே.காம் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் முன்னேற்றம் காணும் வகையில் உருவான இந்த அமைப்பு அறந்தங்கியில் தொடங்கப்பட்டது.
விருதுநகர், திருநெல்வேலி, சிவகாசி, புதுக்கோட்டை, கீரமங்கலம், பேராவூரணி போன்ற இடங்களில் இருந்து ஜே.காம் பிரதிநிதிகள் கலந்து கொண்ட தொடக்கவிழா பட்டுக்கோட்டை ரோடு KVS மஹாலில் A/C  நடைபெற்றது. ஜே.காம் தொடக்க விழாவில் விருந்தினர்கள் அனைவரையும் JCI அறந்தாங்கி சூப்பர்கிங்ஸ் தலைவர் JC. ராஜ்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பொதிகை எண்டர்பிரை இயக்குனர் ரோட்டேரியின் கான் அப்துல் கஃபர் கான்  பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.

 கவுரவ விருந்தினராக மண்டல 18-இன் மண்டல தலைவர் கார்த்திக்,ஜே.காம் மண்டல சேர்மன் ஜே.சி ராதாகிருஷ்ணன், முதன்மை பயிற்சியாளர் ஜே.சி அருண்குமார். அறந்தாங்கி ஜே.காம் பயிற்சியாளர் ஜே.சி விக்னேஷ்  மண்டல துணைத்தலைவர் ஜே.சி அன்புதனபாலன்,மண்டல இயகுனர்(வணிகம்) தினேஷ்சாம்ஜோஷ்,மண்டல வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஜே.சி அசோக் ராஜ், மண்டல செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அறந்தாங்கியில் ஜே.காம் அமைப்பின் முதல் சேர்மனாக ஜே.சி வெங்கட்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். 

பின்னர் துணை சேர்மனாக N.R. பாலன்,செயலாளராக சிவசக்திவேல், பொருளாளராக குணசீலன் ,இயக்குனராக ஆண்டோபிரவின், மாதேஷ், ஆகியோர் பதவி ஏற்றனர். லெட்சுமி பிளைவுட்ஸ் செந்தில் குமார், மணிமாறன் ஹார்ட்வேர் விஜயசுந்தர், ஶ்ரீ சஞ்சீவி லேப் ரோகிணி வெங்கட்குமார்,சூரிய பிரபா முருகேசன் ,ராயல் சூப்பர்மார்கெட்  அப்துல் சாலம், மருதி மொபைல்ஸ் விஸ்வநாதன் புவனாஷ் ஐஸ்கிரீம் செந்தில்குமார் , நல்லையா விறகுகடை மாங்குடி சாத்தர் மற்றும்  புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். செயலாளர் JC. அழகுதுரை மற்றும் கிளை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவு சிவசக்திவேல் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments