அறந்தாங்கி ரோட்டரி சார்பில் சமுதாய கூடம் திறப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக  சமூதாய கூடம் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அறந்தாங்கி ரோட்டரி சங்க அலுவலக வளாகத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய சமூதாய கூட கட்டிடம் தலைவர் மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

துணை ஆளுநர் சுரேஷ்குமார், மண்டல செயலாளர் பீர்சேக் ஆகியோர் முன்னிலையில்
மாவட்ட ஆளுநர் ஜெரால்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து ரோட்டரியின் சேவைகளை விளக்கி பேசினார். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி பயிற்சியாளர் கபார்கான், சங்க வருங்கால தலைவர் செந்தில், முன்னாள் தலைவர்கள் பிஸ்மி முபாரக், முத்தையா, அபுதாலிபு, ஆறுமுகம் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டாரி கிளப் தலைவர் விகாஸ் சரவணன், செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன், ஜீவா சீனி, முனைவர் முபாரக் அலி, இப்ராம்ஷா உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முன்னதாக செயலாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பொருளாளர் விஜயரூபன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments