திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்கள் என்ன என்ன ? வாங்க பார்க்கலாம்
ரயில் போக்குவரத்து
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் போக்குவரத்து மிகவும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. சாலைப் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இதில், ரயில்வே போக்குவரத்து மூலமாக மக்கள் எளிதில் பாதுகாப்பாக குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். கழிப்பறை வசதி மற்றும் வசதியான படுக்கை வசதி இருப்பதால், நோயாளிகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
அதுபோல சரக்கு போக்குவரத்துகள் குறைந்த செலவில் நீண்ட தூரத்திற்கு அதிக அளவில் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது.
ரயில் போக்குவரத்தினால் சாலை விபத்துகள் குறையவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ரயில் போக்குவரத்தை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், பொதுமக்களும் விரும்புகிறார்கள்.
திருவாரூர் - காரைக்குடி பாதையின் வரலாறு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மா (தற்போதைய மியான்மர்) நாட்டில் காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பெரிய அளவில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் பொருள்களை கொண்டு செல்லவும், ஊர் வந்து சேரவும் தங்கள் பகுதிக்கு சென்னையில் இருந்து ரயில் வசதி செய்து தருமாறு ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் தீவிர முயற்சியின் பலனாக ஆங்கிலேய அரசின் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
இந்த ரயில் பாதையில் கடந்த 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவியர் சென்று படித்து வந்தனர். இந்த நிலையில் நாடு முழுதும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகலரயில் பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டன. இதேப்போல இந்த வழித்தடத்தில் காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி இடையே 148 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகலரயில்பாதையாக மாற்ற ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.
இதனால் 1902-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ந் தேதி முதல் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கிய ரயில், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை-திருவாரூா்- காரைக்குடி இடையிலான 187 கி.மீ. தொலைவு கொண்ட ரயில் பாதை, ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான ரயில் பாதையாகும்.
1894-இல் மயிலாடுதுறை- முத்துப்பேட்டை,
1902-இல் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை,
1903-இல் பட்டுக்கோட்டை -அறந்தாங்கி,
1952-இல் அறந்தாங்கி - காரைக்குடி
இந்திய சுதந்திர காலகட்டத்தில் 50 வருட காலமாக முனையமாக (Terminal) அறந்தாங்கி ரயில் நிலையம் இருந்தது குறிப்பிடத்தக்கது
என படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கு இந்த ரயில் சேவை மிகுந்த பயனளித்தது.
இந்நிலையில், அகல ரயில் பாதைப் பணிக்காக, 2006-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை -காரைக்குடி வரையிலான பாதையில் சென்னைக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், 2012-இல் பட்டுக்கோட்டை- காரைக்குடி, திருவாரூா்-பட்டுக்கோட்டை இடையிலான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 14.03.2012 தேதியும் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 15.10.2012 தேதியிலும் நிறுத்தப்பட்டன.
முதற்கட்டமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை( 74 கிலோமீட்டர்) அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 31.03.2018 ம்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை (75கிலோமீட்டர்) அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 30.03.2019 தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேற்கண்ட அகல இரயில் பாதை அமைக்க சுமார் 750 கோடி ரூபாய் இரயில்வே துறையால் )செலவு செய்யப்பட்டுள்ளது
Meter Gauge (மீட்டர் கேஜ்)
மயிலாடுதுறை - காரைக்குடி விரைவு பயணிகள் தொடர் வண்டி. (காலையில்)
மயிலாடுதுறை காரைக்குடி பயணிகள் தொடர் வண்டி (மாலையில்)
சென்னை - எழும்பூர் - காரைக்குடி இரவு நேர விரைவு தொடர் வண்டி.
திருத்துறைப்பூண்டி - காரைக்குடி பயணிகள் தொடர் வண்டி
மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி பயணிகள் தொடர் வண்டி ஆகியன இயங்கியது.
திருச்சி - மயிலாடுதுறை இடையே அகலப்பாதை பணிகள் நடைபெற்ற போது இராமேஸ்வரம் - சென்னை சேது விரைவு, மற்றும் போட்மெயில் விரைவு தொடர் வண்டிகள் காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் பாதையில் இயக்கப்பட்டது. அந்த சமயத்தில் காரைக்குடி - சென்னை இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டது
Braud Gauge (அகலபாதை)
அகலபாதையாக மாற்றப்பட்டு தற்போது 01-06-2023 முதல் நிலவரப்படி
திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் வழியாக 4 ஜோடிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன
* திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் (வாரத்தில் 6 நாட்கள்)
* எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரந்திர சிறப்பு ரயில் (வாரத்தில் ஒரு நாட்கள்)
* செகந்திராபாத் - இராமேஸ்வரம் - செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் (வாரத்தில் ஒரு நாட்கள்)
* சென்னை தாம்பரம் - செங்கோட்டை - சென்னை தாம்பரம் வாரம் மும்முறை அதிவிரைவு (வாரத்தில் 3 நாட்கள்)
மக்களின் கோரிக்கை
இத்தடத்தில் மீட்டர் கேஜ் சமயத்தில் இயங்கிய சென்னைக்கான விரைவு இரயில் சேவை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை இயங்கிய அனைத்து பயணிகள் இரயில்களை இயக்கிட திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி காரைக்குடி இரயில் உபயோகிப்போர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ,சமூக அமைப்புகள், வெளிநாட்டில் வாழும் இப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் இணைந்து தொடர்ந்து இரயில்வே அமைச்சர் ,இரயில்வே போர்டு தலைவர் இரயில்வே துறை அதிகாரிகள் அனைவருக்கும் கோரிக்கை வைத்துக்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.