கோபாலப்பட்டிணத்தில் மழையால் களையிழந்த பெருநாள் தோப்பு!கோபாலப்பட்டிணத்தில் மழையால் பெருநாள் தோப்பு களையிழந்து காணப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  நோன்பு & ஹஜ் பெருநாளில் முன்னிட்டு 
ஆண்களுக்கு  பெண்களுக்கான பெருநாள் தோப்பு நடைபெறுவது வழக்கம். 

பெருநாள் அன்று  ஆண்களுக்கு காலையிலும் (ஆலமரம்), பெண்களுக்கு மாலையிலும் (தோப்பு)  நடைபெற்று வருகிறது..

இதில் நண்பர்கள் உறவினர்களுடன் சென்று ஆண்கள் பெண்கள் சந்தித்து  
மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்..

முதல் பெருநாள் - தலை பெருநாள் என்றும் இரண்டாவது பெருநாள் ஊசி பெருநாள் என்றும் கோபாலப்பட்டிணம் மக்கள் அழைத்து வருகின்றனர்..

இங்கு தீன்பண்ட கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்படுவதால் இந்த தோப்பிற்கு கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் உறவினர்கள் அதிகமாக திரள்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று 29/06/2023 மாலை 5 மணியளவில் கோபாலப்பட்டிணத்தில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது. அதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதையடுத்து குறைவான மக்களே  பெருநாள் தோப்பிற்கு வந்தனர். இதனால் மக்கள் கூட்டம் இல்லாமல் தோப்பு வெறிச்சோடிக் காணப்பட்டது.

வரக்கூடிய நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் கோபாலப்பட்டிணம் தோப்பு குறித்த வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments