கோபாலப்பட்டிணத்தில் GPM பைத்துல்மால் நூலகம் திறப்பு விழா!கோபாலப்பட்டிணத்தில் பைத்துல்மால் கமிட்டி சாபில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று 29/06/2023 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் (மக்கா 1-வது வீதி) பெரிய பள்ளிவாசல், ரேஷன் கடை அருகே அமைந்திருக்கும் GPM பைத்துல்மால் அலுவலகத்தில் பைத்துல்மால் கமிட்டி சார்பில் புதிதாக நூலகம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பெரியோர்கள், GPM பைத்துல்மால் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள GPM பைத்துல்மால் நூலகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. எனவே செல்பேசியில் மூழ்கி கிடைக்கும் சமுதாய சொந்தங்கள் தங்களுடைய வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments