கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!கோபாலப்பட்டிணத்தில் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் இயங்கி வரும் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம் இன்று 30/06/2023 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்ந ஆலோசனை கூட்டமானது உமர் முக்தார் மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் NMA.ஜியாவுதீன், அப்துல் சுக்கூர், செய்யது இப்ராகிம், சீராஜிதீன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் முந்தைய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை குழு உறுப்பினர் NMA.ஜியாவுதீன் இளைஞர்களிடையே விளக்கினார். 
அதனை தொடர்ந்து உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் கோபாலப்பட்டிணத்தில் கலைஞர் திட்ட காப்பீட்டு திட்ட கார்டு இல்லாதவர்களுக்கு புதிய கார்டு எடுத்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோபாலப்பட்டிணம் மற்றும் அவுலியா நகர் பகுதியை சேர்ந்த பெரியவர்கள் இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள உறுப்பினர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு...
ஆலோசனை குழு
உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்
கோபாலப்பட்டிணம்.

தகவல்: நைனா முகமது,கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments