முத்துப்பேட்டையில் காவல் துறை மற்றும் முத்துப்பேட்டை தமுமுக இணைந்து நடத்திய போதை ஒழிப்பு மினி மாராத்தான் போட்டி !சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி முத்துப்பேட்டையில் இன்று காலை காவல்துறை மற்றும் த.மு.மு.க. ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

மினி மாரத்தானை முத்துப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவிலூர் பைபாஸ் தனியார் வனத்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் மன்னார்குடி சாலை, ஆண்கள் பள்ளி, பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. 
இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். முடிவில் போட்டியில் வென்ற முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது. 
இதில் அல்மஹா அறக்கட்டளை நிறுவன ஹைதர் அலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், த.மு.மு.க. மாநில நிர்வாகி வக்கீல் தீன் முகம்மது, நகர தலைவர் அலிம், மன்சூர், காமிம், நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments