ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கியது.. எந்தெந்த வழித்தடங்களில்?பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சுழலும் இருக்கைகள், முழுவதும் ஏசி வசதி, விசாலமான ஜன்னல்கள் என பயணிகள் சொகுசாக பயணிக்க பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக புதுடெல்லி - வாரணாசி இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை - மைசூரு, சென்னை - கோவை என மொத்தம் 18 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில்களின் சேவைகளை தொடங்கிவைத்தார்.

இந்த 5 ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 23 ஆக அதிகரிக்கிறது. கர்நாடகாவின் 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக பெங்களூர் - ஹுப்ளி - தார்வாட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஹுப்ளி - தார்வாட் இடையே சுமார் 490 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 13 நிமிடங்களில் பயணிக்கும். இந்த ரயில் பெங்களூரில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்பட்டு 11:58 மணிக்கு தார்வாட் ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் இந்த வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரயில் இயங்காது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments