சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி இடையே பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு



 

      
சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி இடையே பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 
சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்தி:

வண்டி எண் : 06052 சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி 

வண்டி எண் : 06052 சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூன் 28-ஆம் புதன்கிழமை இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜூன் 29 வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 

வண்டி எண் : 06051 
திருநெல்வேலி ‌- சென்னை சென்ட்ரல் 

மறுமாா்கத்தில் வண்டி எண் : 06051 திருநெல்வேலியில் இருந்து ஜூன் 29-ஆம் வியாழக்கிழமை மதியம் 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அதிகாலை 03.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்

எங்கே எங்கே நின்று செல்லும்?

சென்னை எழும்பூர்
தாம்பரம் 
செங்கல்பட்டு சந்திப்பு, 
விழுப்புரம் சந்திப்பு, 
விருத்தாச்சலம் சந்திப்பு
ஸ்ரீரங்கம்
திருச்சி சந்திப்பு
திண்டுக்கல் சந்திப்பு
மதுரை சந்திப்பு
விருதுநகர் சந்திப்பு
சாத்தூர்
கோவில்பட்டி 

ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments