தொண்டி பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி..தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பள்ளி சேர்க்கை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

மேலும் மழலையர் பள்ளி துவக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பேரீச்சம் பழம், பென்சில் கொடுத்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் வரவேற்றனர். பின்னர் ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments