கோட்டைபட்டினம் உட்பட புதுகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் நேற்று 29/06/23 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகை புதுக்கோட்டை நகர கிளை 1,2, ஆலங்குடி, கறம்பக்குடி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ரெத்தினகோட்டை, வெட்டிவயல், ராஜேந்திரபுரம், கோட்டைப்பட்டினம், கோபாலப்பட்டிணம், ஆர்.புதுப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாபட்டினம், முத்துக்குடா உட்பட 23 இடங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட பேச்சாளர்கள் சிறப்புறையாற்றினார்கள். அதில் தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் ஈதுல் அல்ஹா எனும் பெருநாள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பெருநாளின் பல வணக்கங்கள் அமைந்துள்ளன, தொழுகைக்கு பிறகு அவரவர் சக்திக்குட்பட்டு பலி பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை சொந்த பந்தங்கள், நண்பர்கள், ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தர உள்ளோம், இந்தப்பெருநாளில் அனைவரும் நல்வாழ்வு பெறவும் அழகிய வாழ்க்கையை வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தோம், மனிதருக்கு மனிதர் தியாக உணர்வை வளர்த்துக்கொள்வதையே இப்பெருநாள் வலியுறுத்துகிறது என்று கூறினார்.
சிறப்புத் தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்: ரபிக்ராஜா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.