மணமேல்குடியில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி!மணமேல்குடியில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி கடைவீதி வழியாக சென்றது. 

இதில் மணமேல்குடி, மீமிசல் மற்றும் திருப்புனவாசல் கடற்கரை போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments