சென்னை தாம்பரம் - செங்கோட்டை - சென்னை தாம்பரம் SF எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக இனைப்பு ரயிலில் தென் மாவட்டங்களுக்கு பல்வேறு இடங்களுக்கு செல்லலாம் வாங்க எப்படினு பார்போம்





திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது 


வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி  கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும்  திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு  மறுநாள்   செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
 
எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு 
திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்)
மயிலாடுதுறை சந்திப்பு 
திருவாரூர் சந்திப்பு 
திருத்துறைப்பூண்டி சந்திப்பு 
முத்துப்பேட்டை 
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு 
அருப்புக்கோட்டை
விருதுநகர் சந்திப்பு 
திருநெல்வேலி சந்திப்பு 
சேரன்மகாதேவி
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம் 
தென்காசி சந்திப்பு 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது

லோகோ:

TBM-TVR:   தாம்பரம் முதல் திருவாரூர் வரை எலக்ட்ரிக் லோகாவில் இயக்கப்படும்

TVR-SCT: திருவாரூர் முதல் செங்கோட்டை வரை டீசல் லோகாவில் இயக்கப்படும்


இனைப்பு ரயில்கள் (Connection Train)

தாம்பரம்-செங்கோட்டை 20683 வண்டியில் பயணிப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஊர்களுக்கு செல்ல இணைப்பு இரயில் உள்ளது. எனவே அவ்வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

வண்டி எண்: 20683 தாம்பரம் - செங்கோட்டை ரயில் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் தாம்பரத்தில் இரவு 09.00 மணிக்கு புறப்படும் 

மறுநாள் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில்




1. விருதுநகர் சந்திப்பு 
2. திருநெல்வேலி சந்திப்பு 
3. செங்கோட்டை

விருதுநகரில் சந்திப்பில் இருக்கும் இனைப்பு ரயில்கள்

விருதுநகரில் இறங்கி கீழ்க்கண்ட ஊர்களுக்கு இணைப்பு இரயில் மூலமாக செல்லலாம். அதேபோல அங்கிருந்து திரும்பவும் விருதுநகர் வரவும் திரும்ப இணைப்பு இரயில் உள்ளது. இது வேறு எந்த இரயிலுக்கும் கிடைக்காத வசதியாகும். 

Ex : அறந்தாங்கி - விருதுநகர் - கடையநல்லூர் - விருதுநகர் - அறந்தாங்கி 




20683 தாம்பரம் - செங்கோட்டை ரயில் விருதுநகர் செல்லும் நேரம் காலை 07.13 மணி

06054 மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் வரும் காலை 07.55 மணி 

விருதுநகரில் இறங்கி மதுரை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக கீழ்க்கண்ட ஊர்களுக்கு செல்லலாம் 
திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை, கடையநல்லூர், 

அங்கிருந்து திரும்ப‌ உங்கள் ஊருக்கு வருவதற்கு 

06053 செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்
விருதுநகர் வரும் நேரம் மாலை 06.00 மணி

20684 செங்கோட்டை - தாம்பரம் ரயில் விருதுநகர் வரும் நேரம் இரவு 07.18 

Ex : அறந்தாங்கி - விருதுநகர் - தூத்துக்குடி - விருதுநகர் - அறந்தாங்கி 




20683 தாம்பரம் - செங்கோட்டை ரயில் விருதுநகர் செல்லும் நேரம் காலை 07.13 மணி

16236 மைசூர் - தூத்துக்குடி ரயில் விருதுநகர் செல்லும் வரும் காலை 08.15 மணி 

விருதுநகரில் இறங்கி மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மூலமாக கீழ்க்கண்ட ஊர்களுக்கு செல்லலாம்  சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, தூத்துக்குடி. 

அங்கிருந்து திரும்ப‌ உங்கள் ஊருக்கு வருவதற்கு 

16235 தூத்துக்குடி - மைசூர்  ரயில்
விருதுநகர் வரும் நேரம் மாலை 06.58 மணி

20684 செங்கோட்டை - தாம்பரம் ரயில் விருதுநகர் வரும் நேரம் இரவு 07.18 

திருநெல்வேலியில் சந்திப்பில் இருக்கும் இனைப்பு ரயில்கள்

Ex : அறந்தாங்கி - திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி - அறந்தாங்கி 



20683 தாம்பரம் - செங்கோட்டை ரயில் திருநெல்வேலி செல்லும் நேரம் காலை 08.50 மணி

06675 திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் காலை 10.40 மணி 

திருநெல்வேலியில் இறங்கி திருநெல்வேலி - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக கீழ்க்கண்ட பல ஊர்களுக்கு செல்லலாம் 

முக்கிய ஊர் மட்டுமே குறிப்பிட்டுள்ளது

பாளையங்கோட்டை செய்துங்கநல்லூர் நாசேரத் ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் 

அங்கிருந்து திரும்ப‌ உங்கள் ஊருக்கு வருவதற்கு 

06680 திருச்செந்தூர் - வாஞ்சி மனியாச்சி  ரயில் திருநெல்வேலி வரும் நேரம் மாலை 03.55 மணி

20684 செங்கோட்டை - தாம்பரம் ரயில் திருநெல்வேலி   நேரம் மாலை 05.30 மணி 

திருநெல்வேலியில்  செங்கோட்டை வண்டிக்கும் இணைப்பு உள்ளது.  (திருநெல்வேலி- செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ரயில்)



திருநெல்வேலியில் இறங்கி திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கீழக்கடையம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல 9.45 க்கு கிளம்பும் திருநெல்வேலி-  செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லலாம். திரும்ப வருவதற்கு செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் 02.55 மணிக்கு புறப்படும் 

செங்கோட்டையில் கிடைக்கும் இணைப்பு ரயில்கள் 

Ex : அறந்தாங்கி - செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை - அறந்தாங்கி 




20683 தாம்பரம் - செங்கோட்டை ரயில் செங்கோட்டை செல்லும் நேரம் காலை 11 00 மணி

06659 செங்கோட்டை - கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் காலை 12.00 மணி 

செங்கோட்டையில் இறங்கி செங்கோட்டை- கொல்லம் எக்ஸ்பிரஸ் மூலமாக கீழ்க்கண்ட ஊர்களுக்கு செல்லலாம்  புனலூர் தென்மலை கொல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லலாம்
 
அங்கிருந்து திரும்ப‌ உங்கள் ஊருக்கு  வருவதற்கு 

06660 கொல்லம் - செங்கோட்டை  ரயில்
செங்கோட்டை வரும் நேரம் மதியம் 02.40 மணி

20684 செங்கோட்டை - தாம்பரம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் மாலை 04.15 மணி  

முக்கிய குறிப்புகள்

* சூப்பர் பாஸ்ட் டிக்கெட்டை வைத்து சூப்பர் பாஸ்ட் & எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யலாம், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டை வைத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே பயணம் செய்ய முடியும், சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணம் செய்ய முடியாது..(தாம்பரம் செங்கோட்டை ரயில் சூப்பர் பாஸ்ட் வகையை சார்ந்தது)

* Unreserved பயணம் என்றால் உதாரணமாக அறந்தாங்கியில் இருந்தே நேரடியாக திருச்செந்தூர் என சூப்பர் பாஸ்ட் டிக்கெட் என்று வாங்கிக் கொல்லலாம் வழி: விருதுநகர் திருநெல்வேலி என கூற வேண்டும் 

* இணைப்பு ரயில்களுக்கு  நேரடியாக நீங்கள் பயணிக்கும் ரயில் நிலையத்திற்கு நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.  நேரடியாக முன்பதிவில்ல டிக்கெட் பெறும்போது ஏற்படும் நன்மைகள்!
மீண்டும் இறங்கி டிக்கெட் பெறவேண்டும் என்ற அவசியமில்லை.

* உங்கள் ஊர் ரயில் நிலைய வருவாய் கூடும்.

* உங்கள் ஊர்களில் இருந்து எந்த பகுதிக்கு நேரடியாக டிக்கெட் பெறப்படுகிறது என்பதை ரயில்வே அறிந்துகொள்ளவும், அதற்கு ஏற்றார் போல உங்கள் ஊர் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை பெற வழிவகுக்கும்.

* ரயில் எங்கே வந்து கொண்டு இருக்கிறது நாம் அறியலாம் ரயில்வயின் அதிகார ஆஃப் NTES App மூலமாக தெரிந்து கொள்ளலாம்..

* விருதுநகர் திருநெல்வேலி செங்கோட்டை ரயில் நிலையத்தில் இணைப்பு ரயில் கிடைக்கும்.. நீங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் எங்கே வருகிறது என்று ஆஃப் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் ..

* புகைப்படங்களில் உள்ள 
இனைப்பு ரயில்களில் மைசூர் - தூத்துக்குடி - மைசூர் ரயில் மட்டும் Unreserved Reservation உள்ள பெட்டிகள் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் போது கூட்டம் இருக்கும்.. புகைப்படங்களில் உள்ள மற்ற இணைப்பு ரயில்கள் முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் நீங்கள் எந்த பெட்டியிலும் ஏறலாம்..

* புகைப்படங்களை உள்ள அட்டவணைகளை பார்த்தால் எந்த எந்த ரயில் இணைப்பு ரயிலாக உள்ளது தெளிவாக புரியும் 

PC Credit: Rail News Vlog & Pattukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments