அம்மாபட்டினம் ஊராட்சி மன்றத்தை கண்டித்து SDPI கட்சி முற்றுகை போராட்டம்!



அம்மாபட்டினம் 4-வது வார்டில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை SDPI கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் சுனாமி நகர் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்றத்தில் முறையிற்றும் கண்டுகொள்ளாததால் SDPI கட்சி சார்பில் இன்று 12/06/2023 ஊராட்சி மன்றத்தை கண்டித்து ஊராட்சி மன்றம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஊராட்சி மன்ற தலைவர் 27/6/2023-க்குள் குடிநீர் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்து உறுதியளித்தார். 

இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினர் குறிப்பிட்ட தேதிக்குள் இதை சரி செய்யவில்லை என்றால் SDPI கட்சியின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு SDPI கட்சியின் மணமேல்குடி நகரத் தலைவர் நவாப் தலைமை தாங்க, அறந்தாங்கி தெற்கு தொகுதி பொருளாளர் இஸ்மாயில் மற்றும் கட்சியின் செயல் வீரர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


தகவல்:
SDPI கட்சி,
அம்மாபட்டினம்
மணமேல்குடி நகரம்,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments