அதிராம்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும் ரயில் பயணிகள் கோரிக்கை




மயிலாடுதுறை- காரைக்குடி ரயில் பாதையில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் நடைமேடை 480 மீட்டர் நீளம் கொண்டது. இந்த நடைமேடையில் 21 ரயில் பெட்டிகளை கொண்ட விரைவு ரயில்கள் வரும்போது சில பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது.இதனால் பயணிகள் ஏற இறங்க சிரமமாக உள்ளது. தற்போது செகந்தராபாத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் விரைவு ரயில் சில வாரங்களாக கால தாமதமாக அதிராம்பட்டினத்துக்கு இரவு நேரத்தில் வருகிறது.

சென்னையில் இருந்து இந்த ரயில் அதிராம்பட்டினத்திற்கு வரும்போது குளிர் சாதன வசதி உள்ள இரயில் பெட்டிகள் நடைமேடையை விட்டு இருளான புதர்கள் அடங்கிய பகுதியில் நிற்கிறது. இதனால் பயணிகள் இரவு நேரத்தில் முட்புதர்கள் அடர்ந்த இடத்தில் இறங்க வேண்டியுள்ளது.வருங்காலத்தில் இந்த ரயில் தடத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் 24 ரயில் பெட்டிகள் நடைமேடை பகுதியிலேயே நிற்கும் அளவிற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் அதிராம்பட்டினம் ரெயில் நிலைய நடை மேடைகளை நீட்டித்து தர வேண்டும் என அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள ரயில் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments