கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளை நடத்திய மாணவ மாணவிகளை கௌரவிக்கும் பாராட்டு விழா


கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளை நடத்திய மாணவ மாணவிகளை கௌரவிக்கும்  பாராட்டு விழா நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளை நடத்திய மாணவர்களுக்காக  பாராட்டு விழா
(30/06/2023) வெள்ளிக்கிழமை மாலை கட்டுமாவடி PMS திருமண மஹாலில் கட்டுமாவடி K.M.ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற கட்டுமாவடி ஊராட்சிக்குட்பட்ட மாணவ மாணவிகளை கௌரவித்து பாராட்டும் விழா நடைபெற்றது 

அறக்கட்டளையின் தலைவர் A.இஸ்கந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அறக்கட்டளையின் மார்க்க ஆலோசகர் மௌலானா மௌலவி H.அக்பர் அலி ஆலிம் மன்பஈ அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள், கிராம நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் S.M.சீனியார், சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கவிஞர் சு.ப. கல்யாணசுந்தரம் M.A.,B.Ed ,பேரவை சாவண்ணா, டாக்டர் காந்தி சுப்பிரமணியன் , கட்டுமாவடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் M.நெய்னா முஹம்மது மரைக்காயர் , S.சிராஜுதீன், S.தௌலத் அலி, SDPI கட்சி புதுக்கோட்டை மாவட்ட தலைவர் U. செய்யது அகமது, P.R பட்டிணம் ஜமாஅத் தலைவர் N.S நஜிமூதீன், கட்டுமாவடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் உஸ்மான் மற்றும் நிர்வாகிகள் மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

பரிசு பெற்ற மாணவ மாணவிகள் விபரம் 

1.S.செல்வபாரதி 
2.R.அசின்
3.S.நவீன் பிரசாத்
4.M.ஜெயமாலினி
5.F.முஹம்மது இம்தியாஸ்
6.S.சத்யஸ்ரீ
7.K.ராகவி
8.B.நதியா
9.M.லெட்சுமி
10.A.ரூபினா
11.M.ஹம்தியா சுல்தானா 

அறக்கட்டளையின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் T.ஜமீரல் மஹ்மூது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிக்ழ்ச்சியின் முடிவாக அறக்கட்டளையின் பொருளாளர் M.முஹம்மது இஸ்ஹாக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியை முழுவதும் வீடியோ வடிவில் காண 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments