கோபாலப்பட்டிணத்தில் முஸ்லீம் ஜமாஅத் & கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் சென்டர் இணைந்து நடத்திய புட்பல்ஸ் தெரப்பி 15 நாள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் துவக்க நிகழ்ச்சி

கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் மற்றும் புதுக்கோட்டை கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் சென்டர் இணைந்து புட்பல்ஸ் தெரப்பி 15 நாள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் (Foot Pulse Therapy) துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் முஸ்லீம் ஜமாஅத்தார்கள் மற்றும் புதுக்கோட்டை கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் சென்டர் இணைந்து  03/07/2023 (திங்கட்கிழமை) முதல் 18/07/2023 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை கோபாலப்பட்டிணம் தங்கமணி திருமண மஹாலில் 15 நாள் மாபெரும் புட்பல்ஸ் தெரப்பி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

முகாமின் முதல் நாளான இன்று ஜூலை 03 திங்கட்கிழமை  ஜமாஅத் தலைவர்கள் LION.O.S.M.முகம்மது அலி ஜின்னா, LION.A.S.M.செய்யது முகம்மது தலைமையில் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்..

மருத்துவர் முகம்மது இக்பால் இந்த கம்பேனியோ சிகிச்சை பற்றி விளக்கம் அளித்தார்கள் 

இதில் ஜமாஅத் நிர்வாகிகள்,  உமர் முக்தார் மன்ற தலைவர் S.நெய்னா முகம்மது, மன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள், பல்வேறு கட்சியின் நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர் ..
 
15 நாட்கள் நடைபெறும் மாபெரும் இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டு, இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தங்களை அன்புடன் கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அழைக்கின்றனர்.

குறிப்பு : வருகிற ஜூலை 09ம் தேதி தங்கமஹால் திருமண மண்டபத்தில் திருமண நடைபெறுவதால் அன்று மட்டும் முகாம் நடைபெறாது, அதற்கு பதிலாக ஜூலை 19 ஒரு நாள் சேர்த்து நடைபெறும் என தெருவிக்கப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments