மீமிசல் அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த பந்தயமாடு மீமிசல் அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் பந்தயமாடு உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மீமிசல் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமால் முகமது. பந்தய மாட்டின் உரிமையாளர்.இவருடைய பந்தயமாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போட்டியிலும் வெளி மாவட்டங்களில் நடந்த போட்டியிலும் அதிகமான பரிசுகளை பெற்றுள்ளது குறிப்பாக முதல் பரிசு மற்றும்  ஐந்து வரையிலான இடங்களை பெற்று பல்வேறு போட்டிகளில் கோப்பைகளை வென்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எஸ்பி பட்டினத்தில் நடந்த போட்டியில் பரிசு பெற்று தந்தது. இந்நிலையில் இந்த பந்தயமாடு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.  

இதனால் மாட்டின் உரிமையாளர் அருகிலுள்ள மீமிசல் மற்றும் தீயத்தூர் கால்நடை அரசு மருத்துவர்களை அழைத்துள்ளார். ஆனால் இரு கால்நடை மருத்துவர்களும் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் இந்த பந்தயமாடு மரணம் அடைந்தது. கால்நடை மருத்துவர்கள்   சிகிச்சை அளித்திருந்தால் மாடு பிழைத்திருக்கும். பந்தயமாடு உயிரிழந்தது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments