திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் மோதிய கார்; 4 பேர் பலி!




விராலி மலை அருகே இன்று காலை 6.25 மணியளவில் கார் விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திருச்சி விராலி மலை அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விராலிமலை பகுதியை அடுத்த லஞ்ச மேடு சாலையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் கார் மோதியது. இன்று காலை 6.25 மணியளவில் கார் விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முருகன் என்பவரது மகன் ரவிக்குமார் உயரிழந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மற்ற 3 பேர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments