மணமேல்குடி அரசு ஆண்கள் மேல் பள்ளியில் புதுக்கோட்டை புத்தக திருவிழா முன்னிட்டு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு
மணமேல்குடி ஒன்றியத்தில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை புத்தக திருவிழா முன்னிட்டு  புதுக்கோட்டை வாசிக்கிறது  என்ற நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை  ஜூலை 28 ல் இருந்து  ஆகஸ்ட் 6  வரை நடக்க இருக்கின்ற  புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற  நிகழ்வு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய திரு ஜீவானந்தம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

 மணமேல்குடி நிகழ்வில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திருசெழியன் அவர்கள், திருமதி இந்திராணி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இந்நிகழ்வில் பள்ளியில்  மாணவர்கள் காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை ஒரு மணி நேரம் புதுக்கோட்டை  வாசிக்கிறது நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்கள் புத்தகங்களை வாசித்தனர்.  

காண அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அறிவிலி இயக்கம் நன்றி ஒருங்கிணைப்பாளர் திரு இளையராஜா   அவர்கள் மற்றும் திரு.திருமுருகன் ஆகியோர் செய்திருந்தார்கள்.

 இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் அவர்கள் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகப்பிரியா மற்றும் ஜெனிட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இப்பள்ளியில் அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் புத்தக வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments