மரமடக்கி பகுதியில் இயக்கப்படும் 108 ஆம்புலன்சில் பிராணவாயு கொடுக்கும் O2 கேஜ் மீட்டர் மற்றும் சிலிண்டருக்கு செல்லும் டியூப் இல்லாததால் நோயாளிகள் அவதி!மரமடக்கி பகுதியில் இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்சில் பிராணவாயு கொடுக்கும் O2 கேஜ் மீட்டர் மற்றும் சிலிண்டருக்கு செல்லும் டியூப் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மறமடக்கியில் 108 ஆம்புலன்சில் கடந்த ஒரு மாதமாக பிராணவாயு கொடுக்கும் O2 கேஜ் மீட்டர் மற்றும் சிலிண்டருக்கு செல்லும் டியூப் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி போன்ற அவசர நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். 
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments