திருச்சி மதுரை வழியாக சென்னை டூ நெல்லை வந்தே பாரத்: அக்டோபரில் இயக்க வாய்ப்பு – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் பேட்டி




வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்  5-7-2023 ஆய்வு செய்த பின்பு தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர். என். சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

தென்னக ரயில்வே சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு இணையான உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரை இரட்டை இரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த உடன் கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மறு கட்டமைப்பின் போது கூடுதலான நடைமேடை ஏற்படுத்தப்படும். திருநெல்வேலி சென்னை இடையிலான வந்தே பாரத் துறையில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படலாம். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.

அதிகமான ரயில்வே வருவாய் தரும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் அளவிற்கு அமைக்கப்படும் அதற்கான பணிகளை ஆய்வு செய்து ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார்..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments