அதிராம்பட்டினத்தில் சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயிலை நின்று செல்ல கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தஞ்சாவூர் M.P தலைமையில் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கம் மனு




அதிராம்பட்டினத்தில் சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயிலை நின்று செல்ல கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தஞ்சாவூர் M.P தலைமையில் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கம் மனு அளித்தனர்


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சென்னை தாம்பரம் - செங்கோட்டை அதி விரைவு ரயிலை நின்று செல்லவும் அதிராம்பட்டினம் பகுதி சம்பந்தப்பட்ட இரயில்வே கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் R.N  சிங்கிடம் தஞ்சாவூர் மக்களவை தொகுதி உறுப்பினர்  S.S பழனிமாணிக்கம் M.P தலைமையில் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கம் மனு அளித்துள்ளார்கள் 

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் அதிராம்பட்டினம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் அ.அப்துல் ரஜாக், அதிராம்பட்டினம்  எம்.எஸ்.சைபுதீன் மற்றும் அ.அஹமது இப்ராஹிம் ஆகியோர் 07.07.2023 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளர்  ஆர்.என். சிங் அவர்களை சென்னை தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து அதிராம்பட்டினம் பகுதி சம்பந்தப்பட்ட இரயில்வே கோரிக்கை மனு கொடுத்தனர்




கோரிக்கை மனுவில்

* "தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு இரயில் (20683/20684) அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் 

* திருச்சி சென்னை திருச்சி சோழன் பகல் நேர அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு அதிராம்பட்டினம் வழியாக இரயிலை இயக்க வேண்டும்

* சென்னையில் இருந்து மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் காரைக்குடி வழியாக மதுரைக்கு தினசரி இரவு நேர இரயிலை இயக்க வேண்டும் 

* அதிராம்பட்டினம் இரயில் நடைமேடை நீளம் குறைவாக இருப்பதால் விரைவு இரயில்களின் இரயில் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது இதனால் பயணிகள் ஏற இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவே நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் . என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட இரயில்வே பொது மேலாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கோரிக்கைகளை புது தில்லி இரயில்வே வாரியத்தின் சேர்மன் அவர்களுக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments