வடக்கு அம்மாப்பட்டினத்தில் TNTJ சார்பாக பெண்களுக்காண நல்லொழக்க பயிற்சி வகுப்பு




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  புதுக்கோட்டை மாவட்டம்,  வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக 08.07.2023 அன்று மாபெரும் பெண்களுக்காண நல்லொழக்க பயிற்சி வகுப்பு வடக்கு அம்மாப்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் முகமது மீரான் தலைமை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் சித்திக் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் சேக்அப்துல்லா, கிளை நிர்வாகிகள்  இமாமுத்தீன் & ரஹ்மத்துல்லாஹ், தஞ்சை மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் முஹம்மது அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் TNTJ பேச்சாளர்கள் அப்துல் அஜீஸ் MISC,
ரஹ்மத்துல்லா MISC,
இக்லாஸ் மற்றும் ஜாஸ்மின் பானு ஆலிமா ஆகியோர் நல்லொழுக்க பயிற்சியுடன் சிறப்புறையாற்றினார்கள்.

இந்த நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இறுதியாக பாவா பக்ருதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.பொது சிவில் சட்டத்திற்கு எதிராக ஆளும் திமுக அரசு தீர்மானம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

ஆளும் பாஜக வளர்ச்சி பணிகளை வைத்து தேர்தலை சந்திக்க இயலாது என்பதால் பொது சிவில் சட்டத்தை  தற்போது கையிலெடுத்துள்ளது.

21 வது சட்ட ஆணையம் தன்னுடைய அறிக்கையில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) அவசியம் இல்லை,  தற்போதைய சூழலில் அது  விரும்பத்தக்கதும் அல்ல என்று குறிப்பிட்ட பிறகும் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமாக்கிட முனைப்பு காட்டி வருகிறது.

பல கொள்கை சார்ந்து வாழும் இந்திய தேசத்தில் இது சாத்தியமா என்பதை கூட சிந்திக்கும் திறன் இல்லாதவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். வட கிழக்கு மாநிலங்களில் தற்போது கடுமையான எதிர்ப்புகளை பழங்குடியின இந்து மக்களே வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிஏஏ கருப்பு சட்டத்தை  ஆதரித்து அரங்கேற்ற காரணமாக இருந்த அதிமுக தற்போது பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிரைவேற்றி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி இருக்கும் நிலையில் நாட்டு நலன் கருதி அதிமுக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதே போல நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அத்தனை கட்சிகளும் ஒருங்கிணைந்து பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் ஒன்றிய அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை  ஆளும் திமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் எனவும்,  அடுத்து வரும் முக்கிய நிகழ்ச்சிகளிலும், எதிர் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

2. வடக்கு அம்மாபட்டிணத்தில் பல வருடங்களாக தர்ஹா தெருவில் இறால் பண்ணை இயங்கிவருகிறது. இந்த இறால் பண்ணைகளால் ஊர் முழுவதும் உள்ள நிலத்தடி நீர் மட்டமும், நீரின் தன்மையும் மாசடைந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது சம்மந்தமாக பலமுறை பல துறைகளில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இந்த இறால் பண்ணைகள் மீது நடவடிக்கையில்லையென்றால் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் மக்கள்திரல் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். 

3. வடக்கு அம்மாபட்டிணத்தில் போதுமான மின்மாற்றிகள் இல்லை. மக்களுக்கு பயன்பெறும் மின்மாற்றியை தனியார் இறால் பண்ணைகளுக்கு ஒதுக்கப்பட்டுவதை  வண்மையாக கண்டிக்கிறோம். அதோடு கூடுதலாக பொதுமக்கள் பயன்படும் வகையில் மின்மாற்றிகளை அமைத்து தரும்படி சம்மந்தப்பட்ட மின்வாரியத் துறையை கேட்டுக்கொள்கிறோம். 

4. வடக்கு அம்மாபட்டிணம் பகுதியில் செயல்படக்கூடிய அரசு நடுநிலைப்பள்ளியில் போதுமான ஆசிரியர்களும், மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே சம்மந்தப்பட்ட பள்ளிக் கல்வித்துறை இதற்கான செயல் திட்டங்களை உடனடியாக செய்து தர வேண்டும் என்பதை இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments