அதிராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ! இந்து முறைப்படி அடக்கம் செய்த ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் (IMMK) !

அதிராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ! இந்து முறைப்படி ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் அடக்கம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக, காவல்துறையினர் மற்றும் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் கிடைத்தது, 

இதனை அடுத்து ஜூலை 08 சனிக்கிழமை நேற்று களத்தில் இறங்கிய IMMKவினர் உடலை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில்  மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறாய்வு முடித்து நகராட்சி பொது மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்து முறைப்படி இஸ்லாமியர்கள் உடலை அடக்கம்.செய்த நிகழ்வு நெகிழ்சியை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments