திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் பெய்த கன மழை காரணமாக அறுந்து விழுந்த மின் கம்பி, 11 வயது சிறுவன் மீது பட்டு உயிரிழப்பு




திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயதுடைய சிறுவன் ஜமீல் மிதிவண்டியில் சென்ற பொழுது மழை காரணமாக அறுந்து விழுந்து இருந்த மின்கம்பி ஜமீல் மீது பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காற்று, இடி, மின்னலுடன் கூடிய கன மழை:

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக அடித்து வந்த நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று கோடை கனமழை இடி காற்று மின்னலுடன் கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக திருவாரூர் அடியக்கமங்கலத்தில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய கடுமையான மழை பெய்தது.


மேலும் திருவாரூர், நன்னிலம், பேரளம், குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கோடை கன மழை கொட்டி தீர்த்தது.

சூறைக்காற்றுடன் மழை மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்


இந்த மழையின் காரணமாக குறுவை விதைப்பு செய்த விவசாயிகளும் நடவு செய்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

11 வயது சிறுவன் பரிதாப பலி:

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா அடியக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆறாவது படிக்கக்கூடிய 11 வயதுடைய சிறுவன் ஜமீல் என்ற சிறுவன் நேற்று மாலை நேரத்தில் மழை பெய்யும் பொழுது தன்னுடைய மிதிவண்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

இந்த நிலையில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது சிறுவன் ஜமீல் தன்னுடைய மிதிவண்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது பலத்த காற்றின் காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாமல் ஜமீல் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் பொழுது அருந்து விழுந்து கிடந்த மின் கம்பி ஜமீல் மீது பட்டது.


திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை:

இதனால் ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய ஜமீல் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானான். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் ஜமீல் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள்.

தற்பொழுது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளது திருவாரூர் தாலுகா காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments