மணமேல்குடி SBI வங்கியில் தீ விபத்து காரணமாக தற்காலிகமாக ATM & வங்கியில் அனைத்து சேவைகளும் மீமிசல் SBI வங்கி கிளையில் செயல்படும் என அறிவிப்பு
மணமேல்குடி SBI வங்கியில் தீ விபத்து காரணமாக   தற்காலிகமாக
ATM & வங்கியில் அனைத்து சேவைகளும்  மீமிசல் SBI வங்கி கிளையில் செயல்படும் என அறிவிப்பு 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 7-ந் தேதி அதிகாரிகள் பணிகளை முடித்துவிட்டு வங்கியை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வங்கியில் இருந்து புகை வெளிவந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறை, மணமேல்குடி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வங்கி கதவை திறந்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியிலிருந்த கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.
லாக்கரில் இருந்த பணம், நகைகள், முக்கியமான ஆவணங்கள் தப்பின

இந்நிலையில் மணமேல்குடி பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 

மணமேல்குடி பாரத ஸ்டேட் வங்கி கிளை வாடிக்கையாளங்ளுக்கு இந்த வங்கியில் எதிர்பாராத மின்கசிவுனால் ஏற்ப்பட்ட விபத்துகாரணமாக தற்காலிகமாக ATM மற்றும் வங்கியில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக (மீமிசல் பாரத ஸ்டேட் வங்கி) கிளையில் செயல்படும்.

குறிப்பு: பொதுமக்களின் பணம், தங்கநகை பாதுகாப்பு பெட்டகம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது

இவன் 

கிளை மேலாளர் - பாரத ஸ்டேட் வங்கி
மணமேல்குடி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments