ஆவுடையார்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய தாலுகாக்களை சேர்ந்தவர்களுக்கு ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெயபால் தலைமை தாங்கினார். ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், மணமேல்குடி துணை தாசில்தார் ஜபருல்லா, அறந்தாங்கி துணை தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். குளத்துக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி கூத்தப்பெருமாள்:- வெள்ளாற்றில் அதிக அளவு சீமைக்கருவேல மரங்கள் உள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்தி தர வேண்டும்.

விவசாயி சுப்பிரமணி:- வறட்சி நிவாரணம் இதுவரை அரசு அறிவிக்கவில்லை. அதை உடனடியாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறுமாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி வடிகால் தலைவர் கொக்குமடை ரமேஷ்:- விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் விதைகளையும், விவசாய கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் கோரிக்கை குறித்து பேசினர். விவசாயிகள் கூறியதை கேட்டறிந்த கோட்டாட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதாக கூறினார். இதில் அரசின் பல்வேறு துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments