மீமிசல் அருகே பலத்த மழையால் இருளில் மூழ்கிய கிராமம்! அதிரடி நடவடிக்கை எடுத்த கொடிக்குளம் உதவி மின் பொறியாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!!
பலத்த மழையால் இருளில் மூழ்கிய கிராமத்திற்கு கொடிக்குளம் உதவி மின் பொறியாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் உட்பட  பரவலாக தமிழகத்தில் பல்வேறு  பகுதிகளில் கடந்த 10/07/2023 அன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மீமிசல்  பகுதியில் பல இடங்களில் மின்னல் தாக்கி மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை அறிந்த  கொடிக்குளம் மின்வாரிய உதவி  மின்பொறியாளர் ஷோபனா  இரவோடு இரவாக சரி செய்து மின்சாரத்தை தடையின்றி வழங்கினார். 

அதே போன்று ஆர்.புதுப்பட்டினத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் கிராமமே இருளில் மூழ்கி இருந்தது. இதனால் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரங்களை அப்புறப்படுத்தி, அறுந்து விழுந்த மின் கம்பிகளை மாற்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தார்.  சம்பவ இடத்திற்க்கே வந்து சரி செய்து மின்சாரம் வழங்கிய உதவி மின் பொறியாளர் ஷோபனாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments