பட்டுக்கோட்டையில் இந்தியன் ரயில்வே கருத்தரங்கம்

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே இணை அமைச்சர் அமரர் கும்மட்டி திடல் க. சந்தானத்தின் 129 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி சேவை அமைப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இரயில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 12 .7 .2023 புதன்கிழமை மதியம் பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது.

கருத்தரங்கினை  தலைமை ஆசிரியர் 
சி தெட்சிணாமூர்த்தி தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி  துவங்கி வைத்தார்.
உதவி தலைமை ஆசிரியர் ஆர் ருத்ராபதி, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்க தலைவர் என் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க செயலாளர் வ விவேகானந்தம் வரவேற்புரை ஆற்றினார் . சங்க தணிக்கையாளர்  ஆ.ராமமூர்த்தி க.சந்தானம் நாட்டுக்கு ஆற்றிய நற்பணிகளை எடுத்துரைத்தார்.

திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் எம் ஹரிகுமார்  ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை  வெளியிட்டார். 

பள்ளி தலைமை ஆசிரியர்  சி.தெட்சிணாமூர்த்தி
பெற்றுக்கொண்டார்.

முதுநிலைகோட்ட இயக்கவியல் மேலாளர் மு.ஹரிகுமார்  உரையாற்றும் போது 

இந்தியன் ரயில்வே லாப நோக்கற்ற போக்குவரத்து நிறுவனம் . மேலும் ஒரு சேவை நிறுவனமும் ஆகும். இந்தியன் ரயில்வே மூலம் இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டரை கோடி பயணிகள் பயணம் செய்கிறார்கள்.‌ இரயில் போக்குவரத்தால் தொழில் வளர்ச்சி அடைகிறது. அதனால் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இரயில்வே மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில்   மக்களுக்கு சேவையும் புரிந்து வருகிறது. கொரோனா காலத்தில் உணவு மருந்து பொருட்களை இடைவிடாது கொண்டு சென்றது.

இரயில் பயணம் பாதுகாப்பானது குறைந்த செலவில் பயணம் செல்லக்கூடியது.

எனவே பள்ளி மாணவர்கள்  , இந்தியன் ரயில்வே பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் ரயில்வேயின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் 

வருங்காலத்தில் ரயில்வே துறையில் சேவையாற்ற போட்டி தேர்வுகளுக்கு உங்களை சிறந்த முறையில் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பள்ளி மாணவர்கள் விடுமுறை காலங்களில் ரயில் தண்டவாளங்களில் விளையாடுவது, இரவில் படுத்து உறங்குவது, தண்டவாளங்களில் கற்கள், டயர்களை வைத்து விளையாடுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது.

இது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் பயணிகளுக்கு மிகப் பெரிய இடையூறாகவும் அமையும்.

 ரயில்வே கேட்டுகள் மூடி இருக்கும்போது அதனை கடந்து செல்வது ஆபத்தானது.இதனால் விபத்துகள் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும். இரயில் பயணம் தடைபடுவதால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு  இடையூறாக அமையும். 

அதுபோல கேட்டுகள் மூடி இருக்கும்போது கேட் மேன்களை அச்சுறுத்தி கேட்டுகளை திறக்க பொதுமக்கள் இடையூறு செய்யக்கூடாது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இரயில்வே உயர் அழுத்த மின்பாதை கம்பங்களை , கம்பிகளை தொடக்கூடாது அருகில் செல்வதும் கூடாது
இதனால் உயிர் இழப்பு ஏற்படும்

எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் , பட்டாசு , வெடிமருந்துகள் ஆகியவற்றை இரயிலில் கொண்டு செல்ல கூடாது.
இதனால் தீவிபத்து ஏற்படும்.

இரயில் மற்றும் இரயில் பாதைகளின் நின்று செல்பி எடுக்க கூடாது.

 மாணவ மாணவிகள் இளம் வயதிலேயே சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் .

அரசு வேலை வாய்ப்புகளுக்கும் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகளுக்கும் தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனால் உங்கள் குடும்ப வாழ்க்கை மேன்மை பெறும் .நாடும் வளர்ச்சி அடையும் என்று கூறினார் .

இந்த நிகழ்ச்சியில் இரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பெத்துராஜ், பட்டுக்கோட்டை  இரயில் நிலைய அதிகாரி மருது பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் 

பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி , புனித இசபெல் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த  தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம்,தேசிய பசுமை படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம், பாரத  சாரணர் இயக்கத்தை சேர்ந்த  120  மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றார்கள்.

பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன 
 
சங்க துணைச் செயலாளர்‌ மு.கலியபெருமாள்‌நன்றி உரை ஆற்றினார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments